கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை, காணிக்கை பணம் கொள்ளை
நாட்டறம்பள்ளி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை, காணிக்கை பணம் கொள்ளைடிக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை, காணிக்கை பணம் கொள்ளைடிக்கப்பட்டுள்ளது.
நாட்டறம்பள்ளி அருகே வீரான்வட்டம் சின்னசாமி தெருவில் முத்துமாரியயம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய் மற்றும்வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பூஜை நடைபெறும். மற்ற நாள் கோவில் திறக்கப்படுவதில்லை. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை பூஜை முடிந்ததும் பூசாரி சிவகுமார் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்றபோது அம்மனின் கழுத்தில் தாலிக் கயிற்றில் இருந்த ஞானக்குழாய் தங்கக்காசு உள்ளிட்டவைகள் அடங்கிய 4 பவுன் தங்க நகை மற்றும் உண்டியலில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு பூசாரி தகவல் அளித்தார். இந்த நிலையில் கோவிலுக்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலிஷ் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.