அனல் மின் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெய்வேலியில் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-04-04 18:45 GMT

மந்தாரக்குப்பம்:

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது அனல் மின் நிலையத்தில் 42 பேர் 5 ஆண்டுகளாக நிரந்தர ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் திடீரென தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக மாற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் நிரந்தர ஒப்பந்த தொழிலாளியாக பணியமர்த்த கோரியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் அனல் மின் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்