அரசு டவுன் பஸ் படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்ததால் பரபரப்பு

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பஸ்சின் பின்புற படிக்கட்டில் கடைசி படி திடீரென உடைந்து கீழே விழுந்தது.

Update: 2022-11-30 04:38 GMT

விருதுநகர்:

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் இருந்து விருதுநகருக்கு நேற்று ஒரு அரசு டவுன் பஸ் வந்தது. விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு வழியாக அந்த பஸ் வந்தது. அங்கிருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பஸ்சின் பின்புற படிக்கட்டில் கடைசி படி திடீரென உடைந்து கீழே விழுந்தது.

படிக்கட்டில் கடைசிக்கு முந்தைய படிகளில் பயணிகள் நின்றுள்ளனர். அவர்கள் உடனே சுதாரிப்பாக பக்கவாட்டு கம்பியை பிடித்துக்கொண்டு மேலே ஏறியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. அங்கிருந்தவர்கள் உடைந்து விழுந்த படியை தூக்கி வந்தனர்.

போக்குவரத்து கழக நிர்வாகம் தினமும் பஸ்களை பராமரிப்பதாக கூறினாலும் இம்மாதிரியான சேதமடைந்த நிலையில் உள்ள பஸ்களை வழித்தடங்களில் அனுப்பாமல் அந்த பஸ்களை முழுமையாக பழுது நீக்க வேண்டியது அவசியமாகும். இல்லை என்றால் விபரீத விபத்துகள் ஏற்பட காரணமாகிவிடும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்