"கட்டடங்கள் கட்டுவதில் விதிமீறல்கள் இனி வரக்கூடாது" - வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி
விதிமீறல் கட்டடங்களை ஒழுங்கு செய்ய நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.;
சென்னை,
நகர் ஊரமைப்பு இயக்ககம் சார்பில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 27 நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்களுக்கான 4 வார திறன் மேம்பாட்டு பயிற்சி சென்னை கோயம்பேடு சி.எம்.டி.ஏ. நகர் ஊரமைப்பு இயக்கக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதனை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கட்டடங்கள் கட்டுவதில் விதிமீறல்கள் இனி வரக்கூடாது என்றும், சட்டத்திற்கு உட்பட்டே கட்டடங்கள் கட்ட வேண்டும் என்றும் கூறினார். ஏற்கனவே உள்ள கட்டடங்களுக்கு வரையறை உள்ளதாகவும், இடைப்பட்ட காலங்களில் வந்த விதிமீறல் கட்டடங்களை ஒழுங்கு செய்ய நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.