யார் மீதும் பொய் வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

யார் மீதும் பொய் வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை என மதுரையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

Update: 2023-03-13 20:55 GMT

பேரையூர்

யார் மீதும் பொய் வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை என மதுரையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

ஊராட்சி அலுவலகம் திறப்பு

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வன்னிவேலம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று திறந்து வைத்தார்.

மேலும் வன்னிவேலம்பட்டி ரேஷன் கடையில் அரிசி சரியாக இல்லை என்று கிராம மக்கள் முறையிட்டனர். உடனே அமைச்சர் அருகில் இருந்த ரேஷன் கடைக்கு சென்று அங்கிருந்த ஊழியரிடம் அது குறித்து கேட்டறிந்தார். அரிசி சரியில்லாவிட்டால் உடனடியாக அவற்றை மாற்ற வேண்டும் என்று ஊழியருக்கு அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பி.தொட்டியபட்டி ஊருணி தூர்வாரும் பணி ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

பொய் வழக்கு பதியவில்லை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணங்களுக்கு ஏற்ப, மக்களின் அடிப்படை வசதிக்கான திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கும் பொறியாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, 6500 இடங்கள் நிரப்புவதற்காக தற்போது நேர்முகத் தேர்வு எல்லாம் முடிந்து பணிகள் வழங்கப்பட உள்ளது. காலியாக உள்ள இடங்கள் எல்லாம் நிரப்பப்பட்டு விடும்.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு குறித்து கேட்கிறீர்கள். தமிழக அரசு எந்த பாரபட்சமும் இல்லாமல் செயல்படுகிறது. யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை. காவல்துறை முழு சுதந்திரமாக செயல்படுவது இந்தியாவில் தமிழகத்தில்தான். அதற்கு காரணம் முதல்-அமைச்சர்தான். பொய் வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்