சாலையோரம் குவியும் குப்பைகளால் கடும் துர்நாற்றம்

ஜமீன்முத்தூரில் சாலையோரம் குவியும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

Update: 2022-11-03 18:45 GMT

ஜமீன்முத்தூர்

ஜமீன்முத்தூரில் சாலையோரம் குவியும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

குவியும் குப்பைகள்

பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் 24 மணி நேரமும் அந்த சாலையில் வாகன போக்குவரத்து காணப்படும். அங்கு ஜமீன்முத்தூர் ரோட்டோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது.

மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் குப்பைகள் சாக்கடை கால்வாயில் விழுந்து கிடக்கின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

நோய் பரவும் அபாயம்

பாலக்காடு ரோடு ஜமீன் முத்தூரில் ரோட்டோரத்தில் குப்பைகள், கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும்கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். குப்பைகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்