செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-25 09:37 GMT

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3-வது தளத்தில் உள்ள லிப்ட்டை நோயாளிகள், டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 4½ மணியளவில் 3-வது மாடியில் இருந்து ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் உள்ளிட்ட 12 பேர் லிப்ட்டில் ஏறினர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் லிப்ட்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி அறுந்து மள, மளவென முதல் தளத்தில் நின்றது. மேலும் இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே லிப்ட் நின்றது. இதனால் லிப்ட்டில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் லிப்ட்டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுபோன்ற சம்பவம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 4-வது முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்