வாலாஜா நகருக்குள் பஸ்கள் வந்து செல்ல ேவண்டும்
வாலாஜா நகருக்குள் பஸ்கள் வந்து செல்ல ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜா நகராட்சி தமிழகத்தின் முதல் நகராட்சி ஆகும். வேலூரில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வாலாஜா வந்து செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே செல்கின்றன. இதனால் வாலாஜா பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்த ேநரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. சென்னை செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வாலாஜா நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.