கோவில்பட்டியில் மாற்றுக்கட்சியினர் 50 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

கோவில்பட்டியில் மாற்றுக்கட்சியினர் 50 பேர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2022-11-27 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் விளாத்திகுளம் புதூர் பகுதியில் உள்ள மாற்று கட்சியினர் 50 பேர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கடம்பூர் ராஜூ கூறுகையில்,

ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேர்தல் கமிஷன் எங்களை தான் அங்கீகாரம் செய்யும். வரும் 30-ந்தேதி உச்சநீதிமன்றத்திலும் நல்ல தீர்ப்பு வரும். ஓ.பி.எஸ். நியமனம் செய்யும் பதவிகள் செல்லாது. அது கட்சியை கட்டுப்படுத்தாது. தி.மு.க. அமைச்சர்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. எந்த துறையிலும் ஆக்கப்பூர்வமான பணிகள் நடை பெறவில்லை. தி.மு.க.விலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் வசூலில் தான் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மக்களின் வளர்ச்சி பணியில் ஈடுபடவில்லை, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்