சர்வதேச விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த தேனி போலீஸ் ஏட்டு

சர்வதேச விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த தேனி போலீஸ் ஏட்டுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Update: 2023-05-23 21:00 GMT

சர்வதேச மாஸ்டர் கேம்ஸ் அசோசியேசன் சார்பில் தென்கொரியா நாட்டின் ஜியோன்பக் நகரில் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 12-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடந்தது. இதில் 71 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 25 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும் மாரியப்பன் 40 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்றார். அதில் அவர் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். பதக்கம் வென்று தேனி திரும்பிய ஏட்டு மாரியப்பனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் அவருக்கு உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி மற்றும் போலீஸ் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்