தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய முதல்வர் பதவியேற்பு: டாக்டா்கள், பணியாளர்கள் வாழ்த்து
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய முதல்வர் பதவியேற்று கொண்டார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய முதல்வர் பதவியேற்று கொண்டார். முதல்வராக இருந்த டாக்டர் பாலாஜிநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த டாக்டர் மீனாட்சிசுந்தரம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் இன்று தேனி அரசு மருத்துவமனை முதல்வராக பதவியேற்று கொண்டார். முன்னதாக மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பேராசியரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.