ஆட்டோவில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் திருட்டு

நாகர்கோவிலில் ஆட்டோவில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் திருட்டு போனது.

Update: 2022-06-06 21:17 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஆட்டோவில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் திருட்டு போனது.

தோவாளை நியூ சிட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). பூ வியாபாரியான இவர் நேற்று மதியம் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் பூவுக்கான பணம் 55 ஆயிரத்தை வாங்கி தனது ஆட்டோவின் முன்பகுதியில் உள்ள பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் அவர் அருகில் உள்ள ஒரு கடையில் பொருள் வாங்கி கொண்டு திரும்பி வந்தார். அதற்குள் ஆட்டோவில் வைத்து இருந்த பணம் திருட்டுப்போனது தெரியவந்தது. யாரோ மர்ம நபர் அந்த பணத்தை திருடிச் சென்று விட்டார்.

இதுபற்றி மணிகண்டன் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்