அஸ்தம்பட்டியில் பூட்டிய வீட்டில் ரூ.2 லட்சம் பொருட்கள் திருட்டு 4 பேர் கைது

சேலம் அஸ்தம்பட்டியில் பூட்டிய வீட்டில் ரூ.2 லட்சம் பொருட்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-17 20:00 GMT

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு குள்ளர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 56). இவருக்கு மேட்டுப்பட்டி தாதனூர் அம்மையப்பன் நகரிலும் வீடு உள்ளது. இதனால் இந்த வீட்டிலும் அடிக்கடி சென்று தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதேபோல், கடந்த 15-ந் தேதி அமையப்பன் நகரில் உள்ள தனது வீட்டிற்கு மாணிக்கம் சென்றார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்தில் மாணிக்கம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சதீஷ்குமார் (27), சூர்யா (21), தினேஷ், பரமசிவம் (27) ஆகிய 4 பேர் சேர்ந்து மாணிக்கத்தின் வீட்டில் பொருட்களை திருடியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் திருடிய சில பொருட்களை போலீசார் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்