மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
போடியில் மோட்டார்சைக்கிள்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
போடி மேலத்தெருவை சேர்ந்தவர் தவுபிக்ராஜா (வயது 24). போடி வெள்ளியப்பன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (22). நேற்று இவர்கள் இருவரும் தங்களது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தனர். இந்த 2 மோட்டாா்சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.