பணகுடி:
பணகுடி அருகே காவல்கிணறு சந்திப்பில் தனியாருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் ஒன்றில் நான்கு மினி தியேட்டர்கள் உள்ளது. இந்த தியேட்டர்களில் புதுச்சேரியை சேர்ந்தவர் ஒப்பந்த அடிப்படையில் கேண்டீன் எடுத்து நடத்தி வருகிறார். இதில் கார்த்திக் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வியாபாரத்தில் நடந்த விற்பனை ரூபாயை கேண்டினில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டிச் சென்றார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.