மளிகை கடையில் பணம் திருட்டு

ஆற்காட்டில் மளிகை கடையில் பணம் திருட்டு போனது.

Update: 2022-11-08 18:31 GMT

ஆற்காடு வீட்டு வசதி வாரிய பகுதி 2-ல் வசித்து வருபவர் நாகராஜன் (வயது 62). இவரது மனைவி வாணிஸ்ரீ. இவர்கள் மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடிந்ததும் நாகராஜன் மற்றும் வாணிஸ்ரீ ஆகியோர் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். மீண்டும் நேற்று காலை கடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் திருட்டு போயிரு்தது.

இதுகுறித்து நாகராஜன் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்