சிறைச்சாலை அருகே கடையில் பணம் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறைச்சாலை அருகே கடையில் பணம் திருடப்பட்டது.

Update: 2022-11-17 19:07 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் கிளைச்சிறைச்சாலைக்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆட்டோ ஒர்க்ஸ் கடை நடத்தி வருபவர் பாண்டியராஜன் (வயது 35).இவர் கடையை திறந்து பார்த்தபோது கடையில் உள்ளே இரும்பு மேஜை டிராயர் உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடியவர்களை தேடி வருகிறார்கள்.

இந்த ஆட்டோ ஒர்க்ஸ் கடை அமைந்துள்ள பகுதி எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். எதிரே கிளை சிறைச்சாலை இருந்தும் கடையில் புகுந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்