அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

வாணியம்பாடியில் அடுத்தடுத்து 3 வீடுகளிலும், கோவிலிலும் திருட்டு நடந்துள்ளது.

Update: 2022-11-19 17:05 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடியில் அடுத்தடுத்து 3 வீடுகளிலும், கோவிலிலும் திருட்டு நடந்துள்ளது.

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் காந்திமதி. இவர் கடந்த வியாழக்கிழமை அன்று சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். பூட்டியிருந்த இவரது வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள விஜி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் வீட்டிலும் பூட்டை உடைத்து நகை, பணத்தையும், புதூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதிருந்த பணத்தையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அடுத்தடுத்து வீடுகள் மற்றும் கோவிலில் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்