நர்சு வீட்டில் நகைகள் திருட்டு

மார்த்தாண்டம் அருகே நர்சு வீட்டில் நகைகள் திருட்டு

Update: 2022-07-30 15:07 GMT

குழித்துறை, 

மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் சைமன் சிறில். இவரது மனைவி ஜெனட்பாய் (வயது60). அரசு சமுதாய நல நர்சாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டு அலமாரியில் தலா ஒரு பவுன் எடை உள்ள 6 தங்க காப்புகள் வைத்திருந்தார். இரண்டு தினங்கள் கடந்து காலையில் பார்த்த போது அந்த நகைகளை காணவில்லை. ஆனால், வீட்டில் கதவு எதுவும் உடைக்கப்படவில்லை. இதனால், வீட்டுக்கு அடிக்கடி வந்த சென்ற நபர்கள் யாரோ நகையை திருடி சென்றதாக தெரிகிறது.

இது குறித்து ஜெனட்பாய் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு குடும்ப உறுப்பினர்கள் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், நகையை திருடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்