சிதம்பரம் அருகேசாலை பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்தில் இரும்பு பொருட்கள் திருட்டு6 பேர் கைது

சிதம்பரம் அருகே சாலை பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்தில் இரும்பு பொருட்கள் திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-04-22 20:00 GMT


அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அருகே நெடுஞ்சாலையில் சாலை மற்றும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் குடோன் அம்மாபேட்டை பகுதியில் உள்ளது. நேற்று அதிகாலை இந்த குடோனில் ரூபாய் 16 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில், சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் சகஜானந்தா தெருவை சேர்ந்த விஜய பிரபாகரன் (வயது 25), அம்மாபேட்டை அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27), கோபு (36), பிரேம்குமார் (35) விடியல்குமார் (20) சரண் (25) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சுகந்தன், தேவபாலன், அமலநாதன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்