கிரஷர் ஆலையில் பொருட்கள் திருட்டு

நெல்லை அருகே கிரஷர் ஆலையில் பொருட்கள் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-06-08 19:26 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது 50). இவர் நெல்லை அருகே கங்கைகொண்டான் பகுதியில் கல் உடைக்கும் கிரஷர் ஆலை நடத்தி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆலையை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் அவர் மீண்டும் ஆலைக்கு வந்தபோது, அங்கு வைத்திருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள ஜாக்கி, ரோலர், செம்பு வயர் போன்ற பொருட்களை காணவில்லை. அவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இம்மானுவேல் கொடுத்த புகாரின் பேரில், கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்