வயலில் பொருத்தப்பட்ட நீர் மூழ்கி மோட்டார்கள் திருட்டு

கூத்தாநல்லூர் அருகே வயலில் பொருத்தப்பட்ட நீர்மூழ்கி மோட்டார் திருடப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-08-30 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே வயலில் பொருத்தப்பட்ட நீர்மூழ்கி மோட்டார் திருடப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சவுக்கு தோப்பு

கூத்தாநல்லூர் அருகே உள்ள, குனுக்கடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 41).இவர், குனுக்கடி ரோட்டின் அருகாமையில் உள்ள, மரக்கடை, வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோப்பு மற்றும் வயலினை பார்த்து வரும் மேற்பார்வையாளராக உள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று பிரபு சவுக்கு தோப்பு மற்றும் வயலுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பொருத்தப்பட்ட 2 நீர் மூழ்கி மோட்டார்கள் திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

3 பேர் கைது

இது குறித்து பிரபு கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், புளியங்குடி, நடுத்தெருவைச் சேர்ந்த பாலச்சந்தர் (35), புளியங்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த லெனின்குமார் (23), தென்னரசு (25) ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் சேர்ந்து 2 நீர் மூழ்கி மோட்டார்களையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து பாலச்சந்தர், லெனின்குமார், தென்னரசு ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், புளியங்குடி வாய்க்கால் அருகே திருடி பதுக்கி வைத்திருந்த நீர் மூழ்கி மோட்டார்களையும் கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்