பெண்ணாடத்தில்2 கடைகளில் செல்போன்கள் திருட்டுமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெண்ணாடத்தில் 2 கடைகளில் செல்போன்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2023-05-25 18:45 GMT

பெண்ணாடம்

பெண்ணாடம் கடைவீதி மார்க்கெட் அருகே பேன்சி கடை நடத்தி வருபவர் சுப்பிரமணியன்(வயது 84). இவர் சம்பவத்தன்று கடையில் அமர்ந்திருந்தார். அப்போது மாஸ்க் அணிந்து கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர், சுப்பிரமணியனிடம் நன்கொடை கேட்டு, அதற்கான ரசீதை கொடுத்துள்ளார். ரசீதை பெற்ற சுப்பிரமணியன் அதில் பெயரை எழுதும்போது, மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அவருடைய செல்போனை அந்த மர்மநபர் திருடிக் கொண்டு அங்கிருந்து நழுவி விட்டார். இதேபோல் பெண்ணாடம் கிழக்கு வால்பட்டறை அருகே சின்ன கொசப்பள்ளத்தை சேர்ந்த முத்துலட்சுமி(31) என்பவர் இ சேவை மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் இ சேவை மையத்தில் தான் அமர்ந்திருந்த இருக்கை மீது தனக்கு சொந்தமான ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வைத்து விட்டு, உள்ளே சென்றார். அந்த சமயத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், இருக்கை மீது இருந்த முத்துலட்சுமி செல்போனை திருடிக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்த தனித்தனி புகார்களின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் 2 கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்