மளிகை கடைக்காரர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

மளிகை கடைக்காரர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

Update: 2023-08-31 20:30 GMT

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே ஓடக்கல்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 48). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் அதனருகில் அவருக்கு, சொந்தமான மற்றொரு வீடும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் செல்வகுமார் கடையை பூட்டிவிட்டு, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அருகில் உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டுக்கு தூங்க சென்றார். பினனர் நேற்று காலை 6 மணியளவில் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடை அமைந்துள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கு துணிகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்