அடுத்தடுத்து 2 வீடுகளில் 43 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

கலசபாக்கம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் 43 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-04-24 16:51 GMT

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் 43 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

32 பவுன் நகை திருட்டு

கலசபாக்கம் அருகே நாயுடுமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் வெங்கடேசன், சீனிவாசன். இவர்கள் நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் அடகு கடை மற்றும் ஜுவல்லரி வைத்துள்ளனர்.

நேற்று வீட்டில் மின்சாரம் இல்லாததால் வீட்டின் வெளியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்து சென்று பீரோவில் வைத்திருந்த 32 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

மற்றொரு வீட்டில் திருட்டு

இதேபோல் அருகில் இருந்த அண்ணாமலை என்பவர் குடும்பத்துடன் காற்றோட்டமாக வெளியில் தூங்கி உள்ளனர்.

இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ½ கிலோ வெள்ளி நகைகளை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கலசபாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்