கூடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை திருட்டு
கூடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை திருட்டு
கூடலூர்
கூடலூர் மங்குழி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி (வயது 65) தொழிலாளி. இவரது மனைவி சாவித்ரி (58). இந்த நிலையில் கிருஷ்ணன் குட்டிக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் கூடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக வீட்டை பூட்டி விட்டு சாவித்திரி தனது கணவருடன் ஆஸ்பத்திரியில் இருந்தார். அப்போது மர்ம ஆசாமி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் அங்கு பீரோவில் வைத்திருந்த 27 பவுன் நகையை திருடிசென்றார். இது பற்றி தகவல் அறிந்த சாவித்திரி கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஊட்டியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் நகை திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.