ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு

கந்தர்வகோட்டை அருகே ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் 13 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.

Update: 2023-08-23 19:27 GMT

13 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே முரட்டு சோலகம்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 60). இவர், சோலகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் இல்ல திருமணத்திற்கு குடும்பத்துடன் திண்டுக்கல் சென்று இருந்தார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் பீரோவில் 13 பவுன் நகை, பட்டுப்புடவைகள், பணம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து சின்னதுரை கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் கதவின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்