சிவன் கோவிலில் திருட்டு

விளாத்திகுளம் அருகே சிவன் கோவிலில் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருடப்பட்டது.

Update: 2022-07-01 13:10 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தில்

சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பூசாரியாக வேலை செய்து வருகிறார். நேற்று காலை 5 மணி அளவில்

அவர் பூஜைக்காக சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்துள்ளது. கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது. மேலும் கோவில் இருந்த ரேடியோ ஆம்ப்ளிபயர் உள்ளிட்டவையும் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்