தர்காவில் திருட்டு
ஏர்வாடி அருகே தர்காவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
ஏர்வாடி:
ஏர்வாடி கைகாட்டி சந்திப்பில் பச்சைபிள்ளையம்மா தர்கா உள்ளது. இந்த தர்காவின் முன்பு உண்டியல் உள்ளது. சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுபற்றி தர்கா காப்பாளரான எல்.என்.எஸ்.புரத்தை சேர்ந்த பசிர் அகமது (64) ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.