பேக்கரியின் பூட்டை உடைத்துரூ.1.15 லட்சம் திருட்டு
பரமத்திவேலூரில் பேக்கரியின் பூட்டை உடைத்து ரூ.1.15 லட்சத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்
பரமத்திவேலூர், பஸ் நிலையம் அருகே பேக்கரி வைத்து நடத்தி வருபவர் ஜெயன் (வயது 45). இவர் கடந்த 1-ந் தேதி இரவு பேக்கரியை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் 2-ந் தேதி காலை வழக்கம்போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லா உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயன் கடையில் இருந்த சி.சி.டி. கேமராவை பார்த்தார். அதில் மர்மநபர் ஒருவர் கடையின் பின்புறமாக சுவர் ஏறி குதித்து பின் புற கதவை உடைத்து உள்ளே சென்று கடையின் கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜெயன் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் பேக்கரியில்ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.