கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது

Update: 2023-02-11 18:45 GMT

காரைக்குடி,

காரைக்குடி 100 அடி சாலையில் மணிகண்டன் (வயது 45) என்பவருக்கு சொந்தமான துணிக்கடை உள்ளது. இதன் மாடியில் ராஜ்பாலா (28) என்பவர் கிளினிக் வைத்துள்ளார். அதன் அருகில் செந்தில்நாதன் (53) என்பவர் பைனான்ஸ் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவில் மர்மநபர் இந்த கடைகளின் பூட்டுக்களை உடைத்து உள்ளே புகுந்து கல்லா பெட்டியில் இருந்த ரொக்க பணத்தை திருடி சென்று விட்டார். திருடுபோன பணத்தின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். காலையில் வந்த கடையின் உரிமையாளர்கள் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்குடி குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்