சிறுவனை தாக்கி நகை, பணம் திருட்டுவடமாநிலத்தை சேர்ந்தவருக்கு போலீசார் வலைவீச்சு
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கமலநாதன். இவருடைய மகன் நரேஷ் கமல் (16). இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை பார்த்து நீங்கள் யார்? என கேட்டபோது அந்த நபர் கண்ணாடியால் நரேஷ் கமலின் தலையில் தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்த நரேஷ் கமல் மயங்கினார். பின்னர் வடமாநில நபர் வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி விசாரணை நடத்தி வடமாநிலத்தை சேர்ந்தவரை வலைவீசி தேடி வருகிறார்.