காரிமங்கலம் அருகேஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் 15 பவுன் நகை திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

காரிமங்கலம் அருகே ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு போனது.

Update: 2023-09-18 19:30 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் 15 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்

காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 63). ஓய்வு பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர். நேற்று முன்தினம் இவரது குடும்பத்தினர் ஓசூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றனர். ராஜேந்திரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது நள்ளிரவு வீட்டின் கதவை மர்ம நபர்கள் தட்டி உள்ளனர். இதனால் ராஜேந்திரன் கதவை திறந்து பார்த்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. இதனால் அவர் வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்தார். வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது ராஜேந்திரன் வெளியே சென்றபோது மர்ம நபர்கள் பீரோவை திறந்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்