நடைபாதையை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள சாலையோர கடைகள்

நடைபாதையை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள சாலையோர கடைகள்

Update: 2022-12-29 11:40 GMT

அவினாசி

அவினாசி நகர் முழுவதும் ஏராளமான தெரு ஒரக்கடைகளால் பொதுக்கள் கடும் அவதிக்குள்ளாவதாகவும் எந்த வேலையும் நடைபெறுவதில்லை என்று வார்டு உறுப்பினர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேரூராட்சி கூட்டம்

அவினாசி பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் செந்தில்குமார், துணைத்தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

கோபாலகிருஷ்ணன் (16-வது வார்டு):

அவினாசி பேரூராட்சியில் எங்கெங்கு அரசு நிலம் உள்ளது என்ற விவரம் கேட்டு 8 மாதங்களாக எந்த பதிலும் இல்லை. அரசு நிலம் தொடர்பாக விவரம் கொடுப்பதில் பேரூராட்சிக்கு என்ன தயக்கம். எந்த விவரமும் இல்லாமல் துண்டுகாகிதத்தை கொடுக்கிறீர்கள். அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வதில்லை. அரசு சொத்தை யாரோ அனுபவிக்கட்டும். இனிமேல் நிலம் குறித்து எதுவும் கேட்க போவதில்லை (இ்வ்வாறு கூறி அந்த துண்டு காகிதத்தை கிழித்து எறிந்தார்).

அவினாசி புதிய பஸ் நிலையம் முதல் சிந்தாமணி ஸ்டாப் வரை வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் ரோட்டோரத்தில் கடைகள் வைத்து ரோடு முழுவதும் குப்பைமேடாக மாறிவருகிறது. போக்குவரத்திற்கு இடையூராக கடைகள் உள்ள தால் ஒட்டிகளும் நடந்து செல்லும்பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்றவர்கள் மட்டும் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாதவகையில் கடை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமணி (17-வது வார்டு);

உழவர்சந்தையில் அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே உழவர்சந்தையில் வியாபாரம் செய்ய வேண்டும். ஆனால் உழவர் சந்தையில் ஏராளமானவர்கள் காலை முதல் இரவு 10 மணிவரை வியாபாராம் செய்கின்றனர். இதனால் முறையாக அனுமதி பெற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

திருமுருகநாதன்( 11- வது வார்டு):

மின்கம்பம்

வார்டு பகுதிகளில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் குப்பைகளை அள்ளுவதால் ரோடு பழுதடைகிறது. அன்றாடம் குப்பைகளை அள்ள வேண்டும். அவினாசி பேரூராட்சி 18 வார்டுகளிலும் ரோட்டில் உள்ள மின்கம்பங்களை ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும். வி.எஸ்.வி.காலனியில் ஆழ்குழாய் பிரச்சினையை கவனிக்க வேண்டும். பலமுறை வலியுறுதினாலும் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. மன்றகூட்டம் நடைபெறும்போது பொறியாளர் வருவதில்லை. பொறியாளர்தொடர்பான பணிகள் குறித்து கேட்கும்போது அவர் இருந்தால்தான் அதற்கு உரிய பதில் கிடைக்கும். ஆகவே அடுத்து நடைபெறும் கூட்டங்களில் துறை அதிகாரிகள் கலந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும்.

சசிகலா(7-வது வார்டு):

2-வது வார்டு பகுதி வி.எஸ்.வி காலனியில் காலியாக உள்ள வீட்டுமனை இடங்களில் மற்றும் ரோட் டோரங்களில்செடிகொடிகள் மற்றும் முள்புதர்கள் மண்டி கிடக்கிறது. இதில் ஒருவகையான புழுக்கள் உற்பத்தியாகி குடியிருப்பு வீடுகளில் புகுந்து விடுகிறது. இதனால் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பாதிப்ப ஏற்படுகிறது. மேலும் புதர் மண்டிய. இடங்களில சமூக விரோத செயல்கள் நடக்கி றது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் பகுதி முழுவதும் சுத்தம் செயது புழு, பூச்சிகள் தொல்லையிலிருந்தவிடு பட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தங்கவேல்(3 -வது வார்டு);

மாகாளியம்மன்கோவிலஅருகே சாக்கடை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் 1½ சென்ட் இடத்தில வீடுகட்ட ஒப்புதல் பெற ரூ. 1½ லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு முறைப்படி தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்