பழவியாபாரியை கொலை செய்ய முயன்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழவியாபாரியை கொலை செய்ய முயன்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-11-08 19:26 GMT

திருச்சி தென்னூர் அருகே உள்ள டீக்கடையில் நின்ற ஒருவரிடம் கடந்த மாதம் 12-ந் தேதி கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரவுடி அருண்மணி என்கிற அருணை (வயது 23) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் அருண் மீது காந்திமார்க்கெட்டில் பழவியாபாரியை கொலை முயற்சி செய்த வழக்கும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக ஒரு வழக்கும், மேலும் திருட்டு மற்றும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி அச்சுறுத்தி பணம் பறித்ததாக வழக்குகள் உள்பட 9 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது குற்றச்செயல்களை தடுக்கும்பொருட்டு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அருணிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்