தொழிலாளியை மிரட்டிய வாலிபர் கைது

ஏர்வாடி அருகே தொழிலாளியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-17 18:34 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரத்தை சேர்ந்தவர் குமார் மகன் கண்ணன் (வயது 26). நேற்று இவர் அங்குள்ள அம்மன் கோவில் அருகே நின்று கொண்டு, கோவிலுக்கு செல்லும் பெண்களையும், ஆண்களையும் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி வடிவேல் (45) தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கண்ணன், கம்பியை காட்டி வடிவேலுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றிய புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்