மணல் கடத்திய வாலிபர் கைது

ஆற்காடு அருகே மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-19 17:56 GMT

ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாலாற்று படுகையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு அடுத்த வேப்பூர் பாலாற்றுப் பகுதியில் இருந்து வந்த வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மணலுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட வேப்பூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்