வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மினிவேன் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் காட்பாடி தாலுகா விருதம்பட்டை சேர்ந்த ஜேம்ஸ் (வயது 24) என்பதும், டிரைவர் மற்றும் மினிவேன் உரிமையாளரான அவர் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மணலுடன் மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது