கஞ்சா கடத்திய வாலிபர் சிக்கினார்

போடியில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-01 18:23 GMT

போடி நகர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போடி சாலைகாளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், போடி அருகே உள்ள கோடாங்கிபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்