விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் முத்துநாடார் மகன் பாலமுருகன் (வயது 35). விவசாயி. கூந்தன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (19). டிரைவர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று பிரச்சினை குறித்து முத்துகிருஷ்ணன், பாலமுருகன் வீட்டுக்கு வந்து அவரது தந்தை முத்து நாடாரை கம்பால் தாக்கியதாகவும், அவரது மனைவியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி முத்துகிருஷ்ணனை கைது செய்தார்.