குன்னத்தூர்
குன்னத்தூர் அருகே உள்ள சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 24). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் 17 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பனியன் நிறுவன உரிமையாளர், சிறுமியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு சிறுமியை தங்கராசு கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தங்கராசுவை கைது செய்தனர். சிறுமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.