எந்திரத்தில் சிக்கி வாலிபர் கை துண்டானது

குவாரியில் வேலை செய்தபோது எந்திரத்தில் சிக்கி வாலிபரின் கை துண்டானது.

Update: 2023-08-26 23:15 GMT

பெரியகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 25). பட்டதாரி. இவர், சரத்துப்பட்டி பகுதியில் உள்ள தனியார் குவாரியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று முத்துப்பாண்டி குவாரியில் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அவர் எந்திரத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இதற்கிடையே திடீரென மின்சாரம் வந்ததால் எந்திரம் இயங்க ஆரம்பித்தது. அப்போது எந்திரத்தில் உள்ள பெல்ட்டில் அவரது கை சிக்கியது. இதில் அவரது வலது கை துண்டானது. இதுகுறித்து தென்கரை போலீசில் முத்துப்பாண்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் குவாரி உரிமையாளர் ஆதிமூலம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்