மனைவியை தாக்கி நகை பறித்த வாலிபர்

நண்பர்களுடன் சென்று மனைவியை தாக்கி நகையை பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-21 18:45 GMT

மணவாளக்குறிச்சி:

நண்பர்களுடன் சென்று மனைவியை தாக்கி நகையை பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்து வேறுபாடு

மணவாளக்குறிச்சி தருவை கொல்லன்விளையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் பபின்பிரியன் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். பபின்பிரியன் மேக்காமண்டபம் பிலாங்காலை பகுதியை சேர்ந்த ஜெயபிரியா (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 4 மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மனைவியிடம் நகை பறிப்பு

இந்தநிலையில் சம்பவத்தன்று ஜெயபிரியா மணவாளக்குறிச்சி தருவையில் நகை அடகு கடை ஒன்றில் அடகு வைத்திருந்த நகையை மீட்க தனது ஸ்கூட்டரில் சென் றார். அப்போது அங்கு வந்த பபின் பிரியன் ஜெயபிரியாவை தகாத வார்த்தையால் பேசி தாக்கினார்.

மேலும் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகையை பறித்து விட்டு மிரட்டல் விடுத்தார். பபின்பிரியனுடன் வந்த அவரது நண்பர்கள் பாபுஜிதெருவை சேர்ந்த சரண் (21), தருவையை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோர் ஜெயபிரியாவின் ஸ்கூட்டரையும் எடுத்து சென்றனர்.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பபின்பிரியன் உள்பட 3 பேர் பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்