அரியலூர் மாவட்டம், நாகல்குழி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ரேவதி. இவரது தங்கை ரேணுகா(வயது 26). இவர் ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவில் உள்ள கைத்தறி நெசவாளர் நல வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரேணுகா வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி ஜெயங்கொண்டதிற்கு வந்தவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் வேலை பார்க்கும் இடத்திலும், அக்கம் பக்கத்திலும், உறவினர்கள், தோழிகள் வீட்டுகள் என எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அவரது சகோதரி ரேவதி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் காணாமல்போன ரேணுகாவை தேடி வருகின்றனர்.