கடலில் இறங்கி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலில் இறங்கி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம்
தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலை நேரம் என்ற திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தி ராமேசுவரத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்னி தீர்த்த கடலில் இறங்கி நின்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கருணாமூர்த்தி, சுடலை காசி, பவுல்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.