கலெக்டர் முன் மயங்கி விழுந்த தொழிலாளி

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் முன் மயங்கி விழுந்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-29 13:58 GMT

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பல நாட்களாக குவிந்து கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த பணியை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். அப்போது தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த அரண்மனைப்புதூரை சேர்ந்த தொழிலாளி தினேஷ் என்பவர் திடீரென கலெக்டர் முன் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து கலெக்டர் உடனடியாக அவரை சக பணியாளர்களுடன் சேர்ந்து மீட்டு தனது காரில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு தேவையான சிகிச்சையை உடனே அளிக்க மருத்துவ அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர், மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு, சிகிச்சை பெற்று வந்த தினேசை சந்தித்து உடல் நலன் விசாரித்தார். அவருக்கு ஏற்கனவே உடல் நலனில் பாதிப்பு இருந்த நிலையில் மயங்கி விழுந்ததாக தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சம்பளத்துடன் 2 நாட்கள் விடுமுறை அளிக்க மருத்துவ அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்