தொழிலாளிக்கு சூடு வைத்து சித்ரவதை

நகையை திருடியதாக கூறி தொழிலாளிக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-06-26 15:39 GMT

பேரூர்

நகையை திருடியதாக கூறி தொழிலாளிக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

தொழிலாளி

கோவையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை பூண்டி அருகே முள்ளங்காடு மலைவாழ் கிராமத்தில் ஜெகஜீவன்ராம் வீதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 50). விவசாய கூலி தொழிலாளி.

இவரை, கடந்த 23-ந் தேதி மாலை செம்மேடு, முட்டத்துவயல் பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் கோபால் (வயது 47), நரசீபுரம் ஆத்தூரை சேர்ந்த நஞ்சப்பன் (வயது 54) ஆகியோர் வேலைக்காக வேலைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து கோபால், நஞ்சப்பன் மற்றும் பட்டியார் கோவிலை சேர்ந்த சின்னரத்தினம் (வயது 35) ஆகிய 3 பேரும் சேர்ந்து, கடந்த 4 மாதத்திற்கு முன்பு அவர்களின் நகையை சந்திரன் திருடி விட்டதாக கூறி தகாத வார்த்தையால் பேசி பிளாஸ்டிக் குழாயால் அடித்து துன்புறுத்தி உள்ளனர். ஆனால் அவர் நகையை எடுக்க வில்லை என்று கூறியுள்ளார்.

சூடு வைத்து சித்ரவதை

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் இரும்புக்கம்பியை சூடாக்கி சந்திரனை கையால் பிடிக்க சொல்லி சூடு வைத்து சித்ரவதை செய்து உள்ளனர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

இதையடுத்து சந்திரன், தன்னை அடித்து சித்ரவதை செய்து, கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சந்திரனை அடித்து சித்ரவதை செய்த கோபால், நஞ்சப்பன், சின்னரத்தினம் ஆகிய 3 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்