பாறைகளை தகர்க்க வைத்த வெடி வெடித்து தொழிலாளி உடல் சிதறி பலி; 2 பேர் படுகாயம்
உசிலம்பட்டி அருகே கிணறு ேதாண்டும் போது வெடி வெடித்தது. இதில் கூலி தொழிலாளி உடல் சிதறி பலியானார். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே கிணறு ேதாண்டும் போது வெடி வெடித்தது. இதில் கூலி தொழிலாளி உடல் சிதறி பலியானார். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வெடி வெடித்து தொழிலாளி சாவு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்து டி.கிருஷ்ணாபுரம் உள்ளது. இந்த ஊரில் மள்ளப்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது வெடி வைத்து தகர்த்து கிணற்றில் இருந்து கற்களை மேலே எடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
2 பேர் படுகாயம்
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் வைக்கப்பட்டு இருந்த வெடி ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் கிணற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பரமேஸ்வரன்(வயது 38) உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி(37), திருச்செங்கோட்டை சேர்ந்த ரவி(30) ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து கிணற்றுக்குள் உயிரிழந்த பரமேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.