விபத்தில் தொழிலாளி பலி

கடையம் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2022-08-23 15:59 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டி சபரிநகரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் சாஸ்தா (வயது 45). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வெய்க்காலிபட்டி - மைலப்புரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, எதிரே மினி லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மினி லாரி-மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சாஸ்தா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாஸ்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினி லாரி டிரைவர் கொல்லத்தைச் சேர்ந்த அனாஸ் (25) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்