கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

Update: 2023-04-24 19:30 GMT

திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்துபட்டியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 36). சுமை தூக்கும் தொழிலாளி. இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களிலும் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள கிணற்று அருகே அவர் செருப்பு கிடந்ததை உறவினர்கள் பார்த்தனர். இதனால் மைக்கேல்ராஜ் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான படைவீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி மைக்கேல்ராஜ் உடலை மீட்டனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மைக்கேல்ராஜுக்கு ஜான்சி ராணி (32) என்ற மனைவியும், கெவின் (8) என்ற மகனும், ஜென்சியா (5) என்ற மகளும் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்